SB Order 08/2023 : Circulation of Government Savings Promotion General (Amendments) Rules, 2019

 SB Order 08/2023 : Circulation of Government Savings Promotion General (Amendments) Rules, 2019









Translated in Tamil :
SB Order No:- 08/2023.
Adhar எண்னை அஞ்சலக சேமிப்பு திட்டங்களின் கணக்குகளுடன் இணைப்பது தொடர்பாக


1. கணக்கு தொடங்கும் ஒருவருக்கு‌ ஆதார் எண் ஒதுக்கப்படாத பட்சத்தில், அவர் கணக்கைத் தொடங்கும் போது ஆதார் பதிவுக்கான விண்ணப்பத்திற்கான ஆதாரத்தை அளிக்க வேண்டும் மற்றும் கணக்கில் ஆதார் எண்ணை இணைப்பதற்காக கணக்கு தொடங்கிய நாளிலிருந்து 6 மாதங்களுக்குள் அளிக்க வேண்டும்.


2.ஏற்கனவே கணக்கைத் தொடங்கியவர்கள் தங்களது ஆதார் எண்ணை அஞ்சலகத்தில் சமர்ப்பிக்கவில்லை என்றால், அவர்கள் 01.04.2023 முதல் ஆறு மாத காலத்திற்குள் அளிக்க வேண்டும்.


3.குறிப்பிட்ட ஆறு மாதங்களுக்குள் கணக்கு வைத்திருப்பவர்கள் ஆதார் எண்ணை சமர்ப்பிக்கத் தவறினால், அஞ்சலகத்தில் ஆதார் எண்ணைச் சமர்ப்பிக்கும் வரை அவர்களின் கணக்கு செயல்படாமல் இருக்கும்.


கணக்கு தொடங்கும் போது PAN (Permanent Account Number) சமர்ப்பிக்காத ஒருவர் பின்வரும் நிகழ்வுகளில் ஏதேனும் ஒன்று நடந்த நாளிலிருந்து இரண்டு மாதங்களுக்குள் PAN (Permanent Account Number) கணக்கு வைத்திருக்கும் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அதாவது;-


1.கணக்கில் எந்த நேரத்திலும் இருப்பு தொகை(Balance)ஐம்பதாயிரம் ரூபாய்க்கு மேலாகும் போது
அல்லது
2.எந்தவொரு நிதியாண்டிலும் கணக்கில் உள்ள அனைத்து வரவுகளின் மொத்தத் தொகை ஒரு லட்ச ரூபாய்க்கு மேலாகும் போது
அல்லது
3.கணக்கில் இருந்து ஒரு மாதத்தில் அனைத்து Withdrawal மற்றும் Transfer ஆகியவற்றின் மொத்த தொகை ரூ10000/- கற்கும் அதிகமாகும் போது
குறிப்பிட்ட இரண்டு மாதங்களுக்குள் PAN (Permanent Account Number) எண்ணை கணக்கு வைத்திருப்பவர் சமர்ப்பிக்கத் தவறினால், அவர் கணக்கு வைத்திருக்கும் அலுவலகத்தில் நிரந்தரக் கணக்கு- PAN (Permanent Account Number) எண்ணைச் சமர்ப்பிக்கும் வரை அவரது கணக்கு செயல்படாமல் இருக்கும்;

Updates:

Follow us on WhatsApp, Telegram Channel, Twitter and Facebook for all latest updates

Post a Comment

Previous Post Next Post

Most Visited

Follow us on WhatsApp, Telegram Channel, Twitter and Facebook for all latest updates

Search Content of www.potools.blogspot.com @