TN CM Palaniswami order to pay the wage allowance by electronic money order [eMO]

தமிழகத்தில் நலிவடைந்தோருக்கான உதவித்தொகையை மணி ஆர்டர் மூலம் வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். 
Image result for electronic money order
தமிழ் நாட்டில், சமுதாயத்தில் நலிவடைந்த பிரிவினரான 60 வயது கடந்த முதியோர்கள், மாற்றுத் திறனாளிகள், விதவைகள், வேளாண் தொழிலாளர்கள், ஏழை விவசாயிகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் 50 வயதிற்கு மேற்பட்ட திருமணமாகாத பெண்கள் ஆகியோருக்கு சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் தற்போது மாதாந்திர ஓய்வூதியத் தொகையாக ரூ.1000/- வழங்கப்பட்டு வருகிறது. தமிழ் நாட்டில் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின்கீழ் நாளது தேதியில் 29,48,527 பயனாளிகள் பயனடைந்து வருகின்றனர். 

தற்போதைய நடைமுறையின்படி, ஓய்வூதியத் தொகையானது வங்கிகளின் மூலம் பயனாளிகளுக்கு நேரடியாக வழங்கப்பட்டு வருகிறது. வங்கி ஒருங்கிணைப்பாளர்கள் பயனாளிகள் குடியிருக்கும் கிராமத்தில் பொதுவான ஒரு இடத்தில் வைத்து பயனாளிகளுக்கு ஓய்வூதியத் தொகையினை பயோமெட்ரிக் கருவி (POS Machine) மூலம் வழங்கி வருகின்றனர். இதற்கு சேவைக் கட்டணமாக பயனாளி ஒருவருக்கு ரூ.30 வீதம் வங்கிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. 

Also read :eMO Returns Tool
வங்கி ஒருங்கிணைப்பாளர்கள் பொது இடங்களில் வைத்து பயனாளிகளுக்கு ஓய்வூதியம் வழங்கும் போது கூட்ட நெரிசல் ஏற்படுதல் மற்றும் வயது முதிர்ந்த பயனாளிகளின் கைரேகை தேய்ந்ததன் காரணத்தினால், அவர்கள் ஓய்வூதியம் பெறுதலில் சிரமங்களை தவிர்க்க, வயது முதிர்ந்த பயனாளிகளுக்கு அவரவர்களது வீட்டிற்கே சென்று ஓய்வூதியத் தொகையினை வழங்க சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகளுக்கு பல்வேறு ஆய்வுக் கூட்டங்களில் தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வந்த நிலையில், கடந்த 23.4.2018 அன்று முதல்வர் பழனிசாமி தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், 80 வயதினைக் கடந்து ஓய்வூதியம் பெறும் பயனாளிகளுக்கு அவர்களது வீட்டிற்கே சென்று ஓய்வூதியத் தொகையினை வழங்கும் முறையினை மீண்டும் அஞ்சல் துறை மூலம் கொண்டு வர முதல்வர் பழனிசாமி அறிவுறுத்தினார். 
தமிழ் நாட்டில் முதியோர் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் 80 வயதைக் கடந்த 1,83,308 பயனாளிகள் பயனடைந்து வருகின்றனர். முதல்வர் பழனிசாமியின் அறிவுரைகளின்படி வயது முதிர்ந்த இப்பயனாளிகளுக்கு ஓய்வூதியம் பண அஞ்சல் (Money Order) மூலம் வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Updates:

Follow us on WhatsApp, Telegram Channel, Twitter and Facebook for all latest updates

Post a Comment

Previous Post Next Post

Most Visited

Follow us on WhatsApp, Telegram Channel, Twitter and Facebook for all latest updates

Search Content of www.potools.blogspot.com @